செய்திகள் மலேசியா
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
கூச்சிங்:
சரவாக் மாநிலத்தின் சமராஹான் பிரிவில் உள்ள சடோங் ஜெயா பகுதியில், சுங்கைப் பூலோ பாலத்தின் கீழ் மீன் வலையிடும் போது ஒருவர் முதலை தாக்கியதில் காணாமல் போனார்.
பாதிக்கப்பட்டவர் முகமது பைசல் அப்திலா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நண்பருடன் ஆற்றங்கரையில் மதியம் 12.30 மணியளவில் மீன் வலையிட்டுக் கொண்டிருந்த அவர், இடுப்பளவு நீரில் இறங்கிய தருணத்தில் திடீரென முதலை தாக்கியதாக சாட்சிகள் தெரிவித்தனர்.
நிகழ்வுக்குப் பின் உடனடியாக பொதுமக்களின் உதவியை நாடிய நண்பர், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவசர அழைப்பு 12.40 மணிக்கு கிடைத்ததையடுத்து, மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை, சரவாக் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளை தொடங்கியது.
ஆற்றின் நீரோட்டத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மேற்பரப்பு தேடல் முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 1:43 pm
அறையில் வரும் அந்தரங்கக் காட்சிகள் அசல் திரைக்கதையுடன் ஒத்துப்போகவில்லை: மலாயா பல்கலைக்கழகம்
April 16, 2026, 12:12 pm
லட்சக்கணக்கானப் பறவைகள் பறிமுதல்; ஆசைக்காகப் பறவைகளைச் சிறைவைத்த முதியவர் கைது
April 16, 2026, 11:48 am
மருத்துவமனையில் நேர்ந்த மனிதாபிமானமற்ற செயல்: சிகிச்சையிலிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
April 16, 2026, 10:21 am
கட்டுக்கோப்பான கடமை: அரசு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முறையான திட்டமிடல்
April 16, 2026, 10:03 am
பகாங் பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கப்பட்டார்
April 16, 2026, 10:03 am
எரிசக்தி நெருக்கடி தொடர்பான போலிச் செய்தி வழக்கில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும்: ஃபஹ்மி
April 16, 2026, 10:02 am
