செய்திகள் மலேசியா
எரிசக்தி நெருக்கடி தொடர்பான போலிச் செய்தி வழக்கில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வு தொடர்பான போலிச் செய்திகளைப் பரப்பிய வழக்கில், ஒருவர் மீது சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.
மேலும் ஐந்து பேருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் சமர்ப்பித்த 12 விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், சட்டத்துறைத் தலைமை அலுவலகம் அந்த நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும் நான்கு வழக்குகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பான மேலதிக தகவல்கள் எம்சிஎம்சியால் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 29 முதல் இன்று வரை, போலிச் செய்திகளைப் பரப்புவதாக அடையாளம் காணப்பட்ட 441 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி கண்டறிந்துள்ளது.
மேலும் அவை அனைத்தும் நீக்கும் பணியில் உள்ளன.
இந்த உள்ளடக்கங்களில் பெரும்பாலானவை, டீசல், ரோன் 95, ரோன் 97 போன்ற எரிபொருட்களின் விலை உயர்வு குறித்த தவறான தகவல்கள் உட்பட, உலகளாவிய எரிசக்தி நெருக்கடிப் பிரச்சினை தொடர்பான பொய்யான கூற்றுகளை உள்ளடக்கியுள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:21 am
கட்டுக்கோப்பான கடமை: அரசு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முறையான திட்டமிடல்
April 16, 2026, 10:03 am
பகாங் பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கப்பட்டார்
April 16, 2026, 10:02 am
தண்ணீர் தொட்டியில் நாயை அமிழ்த்தி வைரலான ஆடவர் கைது
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
