செய்திகள் மலேசியா
அறையில் வரும் அந்தரங்கக் காட்சிகள் அசல் திரைக்கதையுடன் ஒத்துப்போகவில்லை: மலாயா பல்கலைக்கழகம்
கோலாலம்பூர்:
அறையில் வரும் அந்தரங்கக் காட்சிகள் அசல் திரைக்கதையுடன் ஒத்துப்போகவில்லை.
மலாயா பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையில் வாயிலாக இதனை தெரிவித்தது.
மலாயா பல்கலைக்கழகத்தின் கார்னிவல் தியேட்டர் போட்டியில் பங்கேற்ற ஒரு நாடகக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
இது சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட அசல் நாடகக் கதையுடன் ஒத்துப்போகவில்லை என்று அப்பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த நாடக நிகழ்ச்சி போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைத் தெளிவாக மீறுவதாகும்.
சமூகத்தினரிடையே எழுப்பப்படும் அனைத்துக் கவலைகளையும் பல்கலைக்கழகம் தீவிரமாகக் கருதி கவனத்தில் கொள்கிறது.
இந்த போட்டியின் பொதுவான விதிமுறைகள், நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நிகழ்ச்சியும் எதிர்மறையான கூறுகள் பல்கலைக்கழகத்தின் நற்பெயரையும் பாதிக்கக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்திலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும்.
இது தொடர்பாக, நிகழ்ந்த தவற்றுக்கும் அதனால் ஏற்படக்கூடிய எந்தவொரு மன உளைச்சலுக்கும் மலாயா பல்கலைக்கழகம் இதன் மூலம் வருத்தம் தெரிவிக்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 12:12 pm
லட்சக்கணக்கானப் பறவைகள் பறிமுதல்; ஆசைக்காகப் பறவைகளைச் சிறைவைத்த முதியவர் கைது
April 16, 2026, 11:48 am
மருத்துவமனையில் நேர்ந்த மனிதாபிமானமற்ற செயல்: சிகிச்சையிலிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
April 16, 2026, 10:21 am
கட்டுக்கோப்பான கடமை: அரசு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முறையான திட்டமிடல்
April 16, 2026, 10:03 am
பகாங் பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கப்பட்டார்
April 16, 2026, 10:03 am
