செய்திகள் மலேசியா
தண்ணீர் தொட்டியில் நாயை அமிழ்த்தி வைரலான ஆடவர் கைது
ஷாஆலம்:
ஷா ஆலம், செக்சன் 32இல் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில், நாயை தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தி துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை நேற்று போலிஸ் கைது செய்தது.
டிக் டாக்கில் அந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்களில் ஒருவரிடமிருந்து அதிகாலை 2.14 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து போலிசாருக்கு புகார் கிடைத்ததாக ஷா ஆலம் போலிஸ் தலைவர் ராம்சே எம்போல் கூறினார்.
அந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு நாய்க்குட்டியை தண்ணீர் தொட்டியில் வன்முறையாக அமிழ்த்துவது தெரிகிறது.
தகவலின் பேரில், பிற்பகல் சுமார் 3.40 மணியளவில், சம்பவம் நடந்த பகுதியில் 20 வயதுகளில் உள்ள உள்ளூர்வாசி என சந்தேகிக்கப்படும் ஒருவரை போலிஸ் கைது செய்தது.
கைது நடவடிக்கையின் போது, மேலதிக நடவடிக்கைக்காக சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறையின் உதவியுடன் சந்தேக நபருடன் மூன்று நாய்களும் கைப்பற்றப்பட்டன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:21 am
கட்டுக்கோப்பான கடமை: அரசு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முறையான திட்டமிடல்
April 16, 2026, 10:03 am
பகாங் பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கப்பட்டார்
April 16, 2026, 10:03 am
எரிசக்தி நெருக்கடி தொடர்பான போலிச் செய்தி வழக்கில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும்: ஃபஹ்மி
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
