நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிரீன் பாக்கெட் - பிரெஸ்மா இடையிலான ஒப்பந்தம்; இந்திய முஸ்லிம் உணவகத் துறையில் ஒரு விரிவான இலக்கவியல் அமைப்பை உருவாக்கும்: டத்தோ வீரா ஷாகுல்

கோலாலம்பூர்:

கிரீன் பாக்கெட் - பிரெஸ்மா இடையிலான ஒப்பந்தம் இந்திய முஸ்லிம் உணவகத் துறையில் ஒரு விரிவான இலக்கவியல் அமைப்பை உருவாக்கும்.

கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.

கிரீன் பாக்கெட் பெர்ஹாட்டின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு இன்று மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

இவ்விழாவில் முக்கிய அங்கமாக இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக இலக்கவியல் சுற்றுச்சூழல் தளங்கள், தொழில் மாற்ற முயற்சிகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் முக்கிய மைல்கற்களைக் குறிக்கும்  வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

மலேசியாவின் முக்கியத் துறைகளில் தொழில்நுட்பம், இலக்கவியல் தீர்வுகளைச் செயல்படுத்துபவராக கிரீன் பாக்கெட்டின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியை  இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இதில் முதல் ஒப்பந்தம் கிரீன் பாக்கெட், பிரெஸ்மா இடையில் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசியாவின் முஸ்லிம் உணவு, பானத் தொழிலுக்காக ஒரு விரிவான இலக்கவியல் அமைப்பை உருவாக்கி செயல்படுத்த ஒரு ஒத்துழைப்பை நிறுவுகிறது.

இந்தக் கூட்டு முயற்சியானது, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும்.

மேலும் தொழில்துறை முழுவதும் நீண்டகால நிலைத்தன்மையை ஆதரிப்பதுடன் ஒருங்கிணைந்த இலக்கவியல் தீர்வுகளை வழங்கும்.

குறிப்பான கட்டண சேவைகள், ஒயிட் லேபிள் இ-வாலட் திறன்கள், வணிகர்களுக்கான  இலக்கவியல் தளங்கள், தரவு நுண்ணறிவு, ஊதிய அணுகல், பணம் அனுப்புதல், இலக்கவியல் நிதி கருவிகள் போன்ற நிதிச் சேவைகள் ஆகியவை அடங்கும்.

இந்தக் கூட்டு முயற்சி ஒரு பெரிய தொழில்துறையை ஒருங்கிணைந்த, விரிவாக்கக்கூடிய,  தரவு சார்ந்த சூழலமைப்பாக இலக்கவியல்  முறையில் மாற்றுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக கிரீன் பாக்கெட் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத், பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி முகமத் மோசின் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset