செய்திகள் மலேசியா
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
சிரம்பான்:
டதாரான் சிரம்பானில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி இருந்த ஒரு குளம் பகுதி, விரைவில் புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட உள்ளது. புதிய நீரூற்று அமைப்புடன், அது சிரம்பானின் புதிய அடையாள ஈர்ப்பாக மாற்றப்படும்.
அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுதீன் ஹருன் தெரிவித்ததாவது,
முன்னாள் கான்வென்ட் பள்ளி வளாகமாக இருந்த இந்த இடம் நீண்ட காலமாக அலட்சிய நிலையில் இருந்து நகரின் தோற்றத்தை பாதித்ததாக கூறினார். சிரம்பான் மாநகராட்சி, நில உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து, கடந்த அக்டோபரில் மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டது.
இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் பிப்ரவரி 11-ஆம் தேதி நிறைவேறியதாகவும், தற்போது அந்த இடம் தற்காலிக வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு, அடுத்த கட்டமாக நீரூற்று குளமாக அமைய பணிகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.
டத்தாரான் சிரம்பான் அருகிலுள்ள இந்த பகுதி, மக்களுக்கான ஓய்வு இடமாக மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:56 pm
தேர்தல்களை நடத்தினால் போதும்; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை: சனுசி
April 16, 2026, 10:55 pm
பயணிகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு உதவித்தொகை; இறுதி வடிவம் பெறுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
April 16, 2026, 10:54 pm
டீசலுக்கான மானியத் திட்டத்தை அறிவிக்க பல கட்ட ஆய்வுகள் தேவையில்லை: டத்தோ சரவணக்குமார்
April 16, 2026, 10:53 pm
செரண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வெற்றி தரும் வேல் வழிபாடு
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
