செய்திகள் மலேசியா
கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
கோலாலம்பூர்:
கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு இன்று தலைநகரில் விமரிசையாக நடைபெற்றது.
இலக்கவியல் தொடர்பான தீர்வுகள், தளங்கள், உள்கட்டமைப்பை வழங்கும் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாக கிரீன் பாக்கெட் விளங்குகிறது.
இந்நிறுவனத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு அதன் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் தலைமையில் நடைபெற்றது.
சிலாங்கூர் மாநிலத்தின் தெங்கு லக்சமனா, தெங்கு சுலைமான் ஷா முதன்மை சிறப்பு பிரமுகராக இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், தேசிய ஒருமைப்பட்டுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
அதே வேளையில் வர்த்தக பிரமுகர்களான டான்ஶ்ரீ வின்சன் தான், டான்ஶ்ரீ ரவிந்திரன் மேனன், டான்ஶ்ரீ பூவன், டத்தோஶ்ரீ ஷேக் அக்மால், டத்தோ பிவி அப்துல் ஹமித், டத்தோ மோசின் உட்பட கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் வர்த்தக பங்காளிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இவ்விழாவில் முக்கிய அங்கமாக இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக இலக்கவியல் சுற்றுச்சூழல் தளங்கள், தொழில் மாற்ற முயற்சிகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் முக்கிய மைல்கற்களைக் குறிக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
மலேசியாவின் முக்கியத் துறைகளில் தொழில்நுட்பம், இலக்கவியல் தீர்வுகளைச் செயல்படுத்துபவராக கிரீன் பாக்கெட்டின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 3:43 pm
பிரிக்பீல்ட்ஸில் பட்டப் பகலில் நகைக் கடையில் கொள்ளை: ஆயுதமேந்திய கும்பல் அராஜகம்
April 16, 2026, 3:25 pm
