நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் ஆகஸ்ட் மாதம் முதல் 873 பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவச காலை உணவு; பெற்றோரின் சுமையைக் குறைக்க உதவும்: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 873 பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படும்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

மேற்கு ஆசியாவில் தற்போது நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து பெற்றோரின் செலவுகளைக் குறைக்கும் வகையில், இந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிலாங்கூர் அரசாங்கம் அனைத்து 873 பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவச காலை உணவு உதவியை வழங்கும்.

9.6 மில்லியன் ரிங்கிட் செலவில் செயல்படுத்தப்படும் சிலாங்கூர் மீள்திறன் வலுப்படுத்தும் தொகுப்பு மூலமான இந்த உதவி, 12 உள்ளூராட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும்.

அதாவது ஒவ்வொரு உள்ளூராட்சி அமைப்பிலும் உள்ள ஒரு பள்ளிக்கு தினமும் இந்த உதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டம் அனைத்து நிலை மாணவர்களுக்கும் செயல்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு உள்ளூராட்சி அமைப்புக்கும் தலா 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல மாதங்களுக்குத் தொடரும்.

சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினால் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

இந்த இலவச காலை உணவுத் திட்டம், இந்த ஆகஸ்ட் மாதம் முதல் தினமும் சுழற்சி முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது பல மாதங்களுக்கு, உதாரணமாக மூன்று மாதங்களுக்கு, தொடரலாம். நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினால் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset