செய்திகள் மலேசியா
டீசலுக்கான மானியத் திட்டத்தை அறிவிக்க பல கட்ட ஆய்வுகள் தேவையில்லை: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
டீசலுக்கான மானியத் திட்டத்தை அறிவிக்க பல கட்ட ஆய்வுகள் தேவையில்லை.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
மேற்கு ஆசியாவில் தற்போது நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து பெட்ரோல், டீசலின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன..
குறிப்பாக டீசலின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் டீசல் விலை நேற்று பெரிய அளவில் குறையும் என மக்கள் பரவலாக எதிர்பார்த்தனர்.
ஆனால் டீசனின் விலை 75 சென் மட்டுமே குறைந்தது.
இதற்கு அரசாங்கம் பல்வேறு காரணங்களை சொன்னாலும் இந்த டீசலின் விலை மக்களுக்கு இன்னும் சுமையாக தான் உள்ளது.
டீசலின் விலை உயர்வதால் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கிறது.
இதனால் அனைத்து பொருட்களின் விலைகளும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரோன் 95 போன்று டீசலுக்கும் மானிய விலை அறிவிக்கப்படும்.
இது குறித்து நிதி அமைச்சு ஆய்வுகளை மேற்கொள்ள அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
ஆனால் என்னை பொருத்தவரை இந்த ஆய்வுக்கு அரசாங்கம் நீண்ட காலம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
காரணம் டீசல் விலை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகவே டீசல் மானியத்தை அரசாங்கம் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:56 pm
தேர்தல்களை நடத்தினால் போதும்; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை: சனுசி
April 16, 2026, 10:55 pm
பயணிகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு உதவித்தொகை; இறுதி வடிவம் பெறுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
April 16, 2026, 10:53 pm
செரண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வெற்றி தரும் வேல் வழிபாடு
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
