செய்திகள் மலேசியா
பயணிகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு உதவித்தொகை; இறுதி வடிவம் பெறுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசியர்களுக்கான பயணிகள் பாதுகாப்புத் திட்டம், தாய்மார்களுக்கான பேறுகால உதவித்தொகை ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான சட்டப்பூர்வமான ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இதனை தெரிவித்துள்ளார்.
பெர்கேசோவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த இரு திட்டங்களும், அமைச்சரவையின் ஒப்புதலுக்காக விரைவில் முன்வைக்கப்படவுள்ளன.
இத்திட்டங்கள் எவ்விதத் தடையுமின்றிச் செம்மையாகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், அதற்கான வழிமுறைகள் தற்போது நுணுக்கமாக ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்,
இந்தத் திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மிக விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும்.
நிதியுதவி வழங்கும் நடைமுறைகள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தகுந்த நேரத்தில் வெளியிடுவார். என்று கூறினார்.
பெர்னாமா தலைவர் டத்தோஸ்ரீ வோங் சுன் வாய் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நாட்டின் வேலைவாய்ப்புச் சூழல், ஊதிய விகிதம் மற்றும் எதிர்காலத் தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு முக்கியக் கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் ரமணன் இது குறித்து முன்னதாக வழங்கிய விளக்கத்தில், பயணிகள் பாதுகாப்புத் திட்டம் என்பது தினசரி பணிக்காகச் சிங்கப்பூருக்குச் சென்று வரும் சுமார் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிவித்திருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:56 pm
தேர்தல்களை நடத்தினால் போதும்; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை: சனுசி
April 16, 2026, 10:54 pm
டீசலுக்கான மானியத் திட்டத்தை அறிவிக்க பல கட்ட ஆய்வுகள் தேவையில்லை: டத்தோ சரவணக்குமார்
April 16, 2026, 10:53 pm
செரண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வெற்றி தரும் வேல் வழிபாடு
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
