நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்

புத்ராஜெயா: 

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடகக் கணக்குகளுக்கான அணுகல் தடையை அரசாங்கம் இந்த ஜூன் மாத இறுதியில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதைச் செயல்படுத்தும் நடவடிக்கையானது இறுதி ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில் கூறினார்.

"மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் தற்போது சமூக ஊடக தளங்களுடன் தள வழங்குநர்களால் தற்போது செயல்படுத்தப்படும் வழிமுறைகளை அடையாளம் காண்பதற்காக ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸை (சோதனைக் களம்) செய்து வருகிறது. 

"இரண்டாவதாக, நாம் எதிர்பார்க்கக்கூடிய வழிமுறைகளுடன் ஒருங்கிணைக்க. வெறுமனே 'வயது உறுதிப்பாடு' (age assurance) என்று குறிப்பிடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, மாறாக 'வயது சரிபார்ப்பு' (age verification) என்று குறிப்பிடப்பட வேண்டும். ஏனெனில், மலேசியா அதன் சட்டச் சூழலில் அரசு அதிகாரப்பூர்வ ஆவணமான மை கார்ட்டைக் கொண்டுள்ளோம்" என்று இன்று இங்கு நடைபெற்ற தகவல் தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் சமூக ஊடக தளங்களுடன் அந்தத் தடையை செயல்படுத்துவது குறித்து எம்.சி.எம்.சி. ஆழமான விவாதங்களை நடத்தியதாக ஃபாஹ்மி கூறினார்.

"அவை இப்போது ஆய்வு செய்யும் செயல்பாட்டில் உள்ளன. பின்னர்  எம்.சி.எம்.சி. அதை என் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள். பின்னர், நாங்கள் முடிவு செய்வோம். இந்தத் தடையை ஜூன் அல்லது ஜூலையில் அமலுக்குக் கொண்டு வர  முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார் அவர்.

பல சமூக ஊடக தளங்கள் அந்தத் தடையை செயல்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும், மேலதிக விவாதங்களின் முடிவுகள் எதிர்வரும் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஃபாஹ்மி கூறினார்.

சமூக ஊடகப் பயனர்களுக்கான புதிய வயது வரம்பை அறிமுகப்படுத்த, அரசாங்கம் சமூக ஊடக தளங்களுடன் ஒரு சோதனைக் களத்தை செயல்படுத்தி வருவதாக ஃபாஹ்மி முன்னர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் வயது உறுதிப்பாட்டு மாதிரியிலிருந்து மலேசியாவின் அணுகுமுறை வேறுபட்டது என்றும், பயனர் அடையாளம், வயதைச் சரிபார்ப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு உறுப்பாக மைகார்ட் குறித்த குறிப்பிட்ட சட்டங்களை மலேசியா பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான சமூக ஊடகத் தளங்களின் எதிர்மறையான விளைவுகள் காரணமாக, கடந்த ஆண்டு 16 வயதிற்குட்பட்ட பயனர்களைத் தடுக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகல் தடைகள் உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதிவுக்காக, 16 வயதிற்குட்பட்ட பயனர்கள் சமூக ஊடக தளங்களை அணுகுவதைத் தடுக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா நிறைவேற்றியது. இது டிசம்பர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset