நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தல்களை நடத்தினால் போதும்; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை: சனுசி

அலோர்ஸ்டார்:

இரு மாநிலங்களில் தேர்தல்களை நடத்தினால் போதும். அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை.

கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி இதனை கூறினார்.

இந்த நேரத்தில் ஒரு ஜசெக தலைவரால் முன்வைக்கப்பட்ட, மலாக்கா, ஜொகூரில் அவசரநிலையை அமல்படுத்தி மாநிலத் தேர்தல்களை  ஒத்திவைக்கும் முன்மொழிவு பொருத்தமற்றது.

மாறாக, தேர்தல் அணுகுமுறை நாட்டின் ஜனநாயக நடைமுறைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

இருப்பினும் இது ஒரு தனிநபரின் கருத்து மட்டுமே. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல.

எனவே இந்த விஷயத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை.

இருப்பினும், தற்போதுள்ள ஜனநாயக செயல்முறையின் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை பேணப்படுவதை உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset