செய்திகள் மலேசியா
செரண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வெற்றி தரும் வேல் வழிபாடு
செரண்டா:
செரண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வெற்றி தரும் வேல் வழிபாடு எனும் வேல் பூஜை நடைபெறவுள்ளது.
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய நிர்வாகம், மலேசிய முருகப் பக்தி பேரவை ஏற்பாட்டில் இப்பூஜை நடைபெறுகிறது.
இப்பூஜை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பேராசிரியர் டாக்டர் வ. ஜெயபாலனின் தலைமையிலும் அவரின் வேல் வழிபாடு எனும் அறிமுக உரையுடன் இவ்விழா தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து மதியம் 12 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
முக்கியமான இந்த வழிபாட்டிற்கு சிறிய வேல், சிறிய தட்டு, விபூதி வைப்பதற்கு கிண்ணம் ஆகியவற்றை மட்டும் எடுத்து வந்தால் போதும்.
ஆகவே பொதுமக்கள் திரளாக வந்து இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
இப்பூஜை குறித்த மேல்விவரங்களுக்கு பெரிய கருப்பனை 0162053505 தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:56 pm
தேர்தல்களை நடத்தினால் போதும்; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை: சனுசி
April 16, 2026, 10:55 pm
பயணிகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு உதவித்தொகை; இறுதி வடிவம் பெறுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
April 16, 2026, 10:54 pm
டீசலுக்கான மானியத் திட்டத்தை அறிவிக்க பல கட்ட ஆய்வுகள் தேவையில்லை: டத்தோ சரவணக்குமார்
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
