நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KiplePay, ரூரல் கேப்பிட்டல் நிறுவனங்கள் இடையிலான கூட்டமைப்பு இலக்கவியல் நிதிச் சூழலமைப்பை மேம்படுத்தும்

கோலாலம்பூர்:

ஒருங்கிணைந்த இலக்கவியல் நிதிச் சூழலமைப்பை உருவாக்குவதில் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தும் நோக்கில் KiplePay நிறுவனம், ரூரல் கேப்பிட்டல் பெர்ஹாட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு  இரு தரப்பினரும் பல்வேறு பயனர் பிரிவுகள், சூழலமைப்புப் பங்காளர்களின் தேவைகளுக்கு ஆதரவளிக்கும்.

மேலும் ஒயிட்-லேபிள் டிஜிட்டல் வாலட், இலக்கவியல் நிதி உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நிறுவனங்களும் தங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி,  திறமையான, விரிவாக்கக்கூடிய இலக்கவியல் நிதித் தீர்வுகளை வடிவமைப்பதுடன் செயல்படுத்தும்.

தனிப்பயனாக்கப்பட்ட இலக்கவியல் வாலட்களை உருவாக்குவது. ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டண வசூல் அமைப்பை நிறுவுதல்.

செயல்திறன் கண்காணிப்பு, வணிகத்தை ஆதரவளிக்க செயற்கை நுண்ணறிவு  அடிப்படையிலான தரவுப் பகுப்பாய்வைப் பயன்படுத்துதல் ஆகியவை இந்த ஒத்துழைப்பின் முக்கிய நோக்கமாகும்.

கூடுதலாக இந்த முயற்சியில் இலக்கவியல் அடையாளம், பயன்பாட்டுத் தொகுதிகள், கட்டணம், விநியோக அமைப்புகள், மின்-விலைப்பட்டியல்கள், தகவல் தொடர்பு கருவிகள் போன்ற பல்வேறு அம்சங்களும் இதில் அடங்கும்.

இந்தக் கூட்டுறவு குறித்துக் கருத்து தெரிவித்த கிரீன் பாக்கெட் பெர்ஹாட் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான டத்தோ வீரா ஷாகுல் தாவூத்,

நடைமுறைக்கு உகந்த, உண்மையான தேவைகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய ஒரு இலக்கவியல் நிதி உள்கட்டமைப்பை உருவாக்குவதில் தங்களின் தொடர்ச்சியான கவனத்தை இந்தக் கூட்டுறவு பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset