நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மரத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலி

பாசிர் பூத்தே:

கம்போங் வகாஃப் ராஜாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், ஒரு ஆண் உயிரிழந்தார். அவர் ஓட்டி வந்த வாகனம் மரத்தில் மோதிய பின் கவிழ்ந்து தீப்பிடித்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தும்பாட் பகுதியைச் சேர்ந்த காங் கெங் அன் (51), டொயோட்டா எஸ்டிமா பல்நோக்கு வாகனத்தை ஓட்டி சென்றபோது, மற்றொரு வாகனத்தை முந்த முயன்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

பாசிர் பூதே தீயணைப்பு, மீட்புப் படை நிலையத் தளபதி ஹஸ்மிஜான் ஜோஹாரி தெரிவித்ததாவது, அதிகாலை 4 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஏழு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. கவிழ்ந்த வாகனம் முழுவதுமாக தீக்கிரையான நிலையில் காணப்பட்டது.

இந்த விபத்தில் தொடர்புடைய மற்ற இரண்டு வாகனங்களான பெரோடுவா மைவி, டொயோட்டா கேம்ரி ஓட்டுநர்கள் பாதுகாப்பாக உயிர்தப்பினர்; அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என மலேசிய சுகாதார அமைச்சு அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset