செய்திகள் மலேசியா
திரெங்கானுவில் 226 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
செட்டியு:
திரெங்கானு மாநில மலேசிய குடிநுழைவுத் துறை, செட்டியுவில் நேற்று நடத்தப்பட்ட ‘ஆப் மேகா’ நடவடிக்கையின் போது, 226 சட்டவிரோத வெளிநாட்டவர்களை கைது செய்தன.
மெராங் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், 64 அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தேசிய பதிவுத் துறை, தொழிலாளர் துறை, கட்டுமானத் துறை மேம்பாட்டு வாரியம், சிவில் பாதுகாப்புப் படை, புத்ராஜெயா இமிக்ரேஷன் சிறப்பு நடவடிக்கைப் படையினர் ஆகியோர் இணைந்தனர்.
திரெங்கானு இமிக்ரேஷன் இயக்குநர் மொஹமட் யுஸ்ரி மொஹமட் நோர் தெரிவிப்பதன்படி, 226 வெளிநாட்டவர்கள் குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அடையாள ஆவணமின்றி இருப்பது, அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்குவது, வேலை அனுமதியை தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றங்களின் அடிப்படையில் கைதாகினர்.
இதில் வங்களாதேசம், இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைதாகினர்.
இது மாநிலத்தில் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய கைது நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
