செய்திகள் மலேசியா
சிறுவனின் வீர செயல்: நீரில் மூழ்கிய நண்பனை காப்பாற்றிய 12 வயது சிறுவன்
அலோர் ஸ்டார்:
லங்காவியில் உள்ள பந்தாய் பாசிர் ஹித்தாம் கடற்கரையில் நடந்த சம்பவத்தில், 12 வயது சிறுவன் காட்டிய தைரியமான, துரிதமான செயலால் மூழ்கும் நிலையில் இருந்த தனது 10 வயது நண்பனைக் காப்பாற்ற முடிந்தது.
சம்பவ நேரத்தில் அவரும் அவரது இரண்டு நண்பர்களும் ஓட்டப் பயிற்சியை முடித்துவிட்டு, ஓய்வெடுக்க கடற்கரைக்குச் சென்றதாக 12 வயதான ஃபாரிஸ் டேனிஷ் சுல்ஃபாட்லி தெரிவித்தார்.
“திடீரென, பாறைகளின் அருகே விளையாடிக் கொண்டிருந்த என் நண்பன் கடலில் விழுந்தான். அவனுக்கு நீச்சல் தெரியும் என்று நினைத்தேன். அதனால், இன்னொரு நண்பனுடன் கரையில் உட்கார்ந்திருந்தேன். சில நிமிடங்கள் கடந்தும் அவன் மேலே வரவில்லை.
“அப்போது, அவனைக் காப்பாற்றலாமா வேண்டாமா என்று யோசித்தேன். நானும் மூழ்கிவிடுவேனோ என்று பயந்தேன். ஆனால் அவனை விட்டுவிட மனம் வரவில்லை. உடனே கடலில் குதித்து அவனை இழுத்து கரைக்குக் கொண்டு வந்து, சுவாச உதவி (CPR) செய்தேன்,” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
பள்ளியின் படகோட்ட விளையாட்டு வீரரும், பெங்குலு அஹ்மத் தேசிய பள்ளியின் மலேசியன் ரெட் கிரசண்ட் (BSMM)-இன் தலைவருமாக இருந்த ஃபாரிஸ் டேனிஷ், CPR செய்த பின் உடனே தனது தந்தையைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரச் சொன்னதாகவும் தெரிவித்தார்.
“பிறகு, என் தந்தை ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் உதவி கேட்டு, என் நண்பனைத் தலைகீழாக தூக்கச் செய்து, உடலில் இருந்த நீர் வெளியேற உதவினார். அப்போது அவன் சுயநினைவுக்கு வந்தான். ஆம்புலன்ஸ் வந்தவுடன், அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
“என் நண்பனைக் காப்பாற்ற முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். படகோட்டம், நீச்சல், CPR குறித்து நான் கற்றுக்கொண்ட அறிவும் அனுபவமும் மிக உதவியாக இருந்தது,” என்றார் அவர்.
சுயதொழில் செய்து வரும் அவரது தந்தை, 41 வயதான ஸுல்ஃபாத்லி முஹம்மது யூசொஃப், மகன் அழைத்தபோது, கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்ததாக தெரிவித்தார்.
“11 மாத வயதிலிருந்தே ஃபாரிஸ் டேனிஷை நீர்விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வந்தேன். ஆனால் இதுபோன்ற சூழ்நிலையை முதல் முறையாக எதிர்கொண்டதால் மிகவும் கவலைப்பட்டேன். இருப்பினும், அவனும் அவன் நண்பனும் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி. ஒரு தந்தையாக அவன் தைரியத்தில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.
இதற்கிடையில், லங்காவி மாவட்ட காவல் துறை தலைவர் ACP கைருல் அசார் நுருதீன், சம்பவத்தை உறுதிப்படுத்தினார். 10 வயது சிறுவன் முதலில் லங்காவியில் உள்ள சுல்தானா மாலிஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், மேல்சிகிச்சைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹிய்யா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
