செய்திகள் மலேசியா
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் தீர்க்க தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது
கோலாலம்பூர்:
மஇகா, மலேசிய இந்து சங்கம் இணைந்து பல இந்து அமைப்புகள், ஆலய அமைப்புகளின் ஆதரவுடன் தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டதை மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் அறிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் நில உரிமை பிரச்சினைகளால் ஆலயங்கள் இடிப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் சூழலில் கவலை, பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதனை தீர்க்கும் நோக்கில், இந்த குழு அடுத்த 6 மாதங்களில் ஆலயப் பிரச்சினைகளுக்கான “வெள்ளைப்படுத்துதல்” (regularisation/whitening) செயல்முறையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
செயல் திட்டம்
1. முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் நிரப்ப வேண்டிய புதிய Google Form ஆய்வு தொடங்கப்படும்.
2. அந்தத் தரவின் அடிப்படையில் ஆலயங்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
3. அதன் பின்னர் குழு நேரடியாக ஆலயங்களைச் சந்தித்து வழிகாட்டுதல் மற்றும் சட்ட உதவி வழங்கும்.
இந்த கட்டுமானமான அணுகுமுறையின் மூலம் பல ஆலயங்களை சட்டப்பூர்வமாக்க முடியும் என நம்பிக்கையை குழு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திடம் கோரிக்கை
குழு அரசாங்கத்திடம் பின்வரும் அவசர கோரிக்கைகளை முன்வைக்கிறது:
• ஆலய இடிப்பு நடவடிக்கைகளுக்கு 6 மாத இடைக்காலத் தடை (moratorium) வழங்க வேண்டும்.
• இடிப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட மத மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்; இந்நிகழ்வுகளில் திறந்த இடிப்பு சமுக உணர்வுகளை புண்படுத்தும்
• ஒரு ஆலயம் என்பது கட்டிடம் அல்லாது சிலை மட்டுமல்ல. அது மக்களின் நம்பிக்கையும் ஆன்மிக வாழ்வும் ஆகும் என்று அவர் சொன்னார்.
மறு இடமாற்றம் தொடர்பாக
ஒரு ஆலயம் இதில் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால்:
• தெய்வச் சிலைகள் முறையான ஆகம சட்டங்களுடன் மாற்றப்படும்
பின்னர் மட்டுமே இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
தேசிய ஒற்றுமை, மத மரியாதை மற்றும் சட்டப்பூர்வ தீர்வுகளை உறுதி செய்வதற்காக, ஆலய இடிப்பு மற்றும் மாற்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் 6 மாத இடைக்கால தடை விதித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என குழு மீண்டும் வலியுறுத்துகிறது என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்து சங்கத்தின் அலுவலக மண்டபத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், ஆகம அணி தலைவர் அருண் துரைசாமி, மலேசிய இந்து தர்ம மாமன்றம் தலைவர் ரிஷி குமார், மலேசிய இந்து வழக்கறிஞர்கள், தலைவர் வழக்கறிஞர் ஆர்.வி லிங்கம் உட்பட பல இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
