செய்திகள் மலேசியா
கர்ப்பிணி மனைவி கொலை வழக்கில் கணவர் கைது
கோத்தா திங்கி:
கம்போங் மாக்காமில் உள்ள வாடகை வீட்டில், ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர், நேற்று கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள், வரும் வியாழன் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் நுர்கலிதா ஃபர்ஹானா அபு பக்கர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் மேலதிக விசாரணை நடத்துவதற்காக, இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் தடுப்புக் காவல் கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று, ஏழு மாத கர்ப்பிணியான ஒரு பெண்ணைத் தன் கணவர் கல்லாலான உலக்கையால் தாக்கி கொலை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
34 வயதுடைய அந்தப் பெண் காலை 7 மணியளவில் வீட்டின் உரிமையாளரால் அறையில் ரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இச்சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர், சூப்பிரிண்டெண்ட் யூசோஃப் ஒத்மான், இந்தச் சம்பவம் பொறாமை காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு அருகே சந்தேக நபரைப் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
