நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பமான காலநிலை எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை ஏற்படுத்தாது

கோலாலம்பூர்: 

மலேசியாவின் சில பகுதிகளில் தற்போது நிலவி வரும் வெப்பமும் வறட்சியும் எல்லைத் தாண்டிய புகைமூட்ட அபாயத்தை ஏற்படுத்தவில்லை.

அதிக வெப்பநிலை தொடர்ந்தாலும், தற்போது காற்றின் திசை வடகிழக்கிலிருந்து, அதாவது தென் சீனக் கடலிலிருந்து வீசுவதால், எல்லைத் தாண்டிய புகைமூட்டம் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று மலேசிய வானிலைத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹ்த் ஹிஷாம் மொஹ்த் அனிப் தெரிவித்துள்ளார்.

“தற்போது ஏற்படக்கூடிய புகைமூட்டம் உள்ளூர் அளவிலானதாக இருக்கும். அதாவது, அது உள்ளூர் தீ விபத்துகளால் உருவாகும் புகை காரணமாகவே இருக்கும்; அண்டை நாடுகளிலிருந்து வரும் புகையால் அல்ல,” என்றார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், எல்லைத் தாண்டிய புகைமூட்டம் பொதுவாக மே மாத இறுதி முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் என்றார்.

இதற்கிடையில், MET Malaysia இணையதளத் தகவலின்படி, கெடா மாநிலத்தில் உள்ள போகோக் சேனா பகுதி (நிலை 1) எச்சரிக்கை நிலையில் உள்ளது.

“போகோக் சேனாவில் கடந்த மூன்று நாட்களாக தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதி எச்சரிக்கை நிலையில் உள்ளது,” என்றார் அவர்.

மற்ற மாநிலங்களில், தினசரி வெப்பநிலை இன்னும் 35 டிகிரி செல்சியஸை மீறாத நிலைமையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset