நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நள்ளிரவு விபத்து: தீயில் சிக்கி இருவர் பலி

பகாங்:

பகாங் மாநிலம் தெமர்லோ மெண்தகாப் அருகிலுள்ள தாமான் துவாலாங் இன்தா பகுதியில், இரவு 12.57 மணியளவில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. மோதலுக்குப் பிறகு ஒரு கார் தீப்பற்றி முழுமையாக எரிந்தது.

அந்த காரில் இருந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் முழுமையாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.

போர்ஷே கெய்ன் காரில் காயமடைந்த ஆண் பயணிக்கு, அதே இடத்தில் சுகாதாரப் பணியாளர்களால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு, மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்து, காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset