நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அசாம் பாக்கி விவகாரம் தொடர்பில் புக்கிட் அமான் புளூம்பர்க் மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்குகிறது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் பங்கு உரிமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக பிப்ரவரி 10 அன்று புளூம்பர்க் அளித்த புகாரின் பேரில் புக்கிட் அமான் போலிஸ் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
நேற்று  சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போலிஸ் புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

மலேசிய ஊழல் எதிர்ப்புத் தலைவர் கூச்சலுக்குப் பிறகு பங்குகளுக்குத் திரும்புகிறார்' என்ற தலைப்பிலான ப்ளூம்பெர்க் கட்டுரையில் அசாமுக்கு எதிராக அவதூறான அறிக்கைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

அவதூறுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500, தகவல் தொடர்பு, பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 (நெட்வொர்க் வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் போலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவால் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset