நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டத்திற்கு மீறி செயல்பட்ட 9 கிளினிக்குகள்: மலேசிய குடிவரவுத் துறையின் அதிரடி சோதனையில் அம்பலமானது

கோலாலம்பூர்:

ஜாலான் துன் டான் ஸ்யூ சியூ சின் பகுதியில் பத்திரப்பதிவு இல்லாமல் செயல்படும் 9 மருத்துவக் கிளினிக்கள் மீண்டும் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதிக்கப்பட்டன.  

இவற்றில் பெரும்பாலானவர், சரியான அனுமதி இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்கியதாக கண்டெடுக்கப்படன.

சம்பந்தப்பட்ட வளாகத்தில் விற்பனைக்குக் கிடைத்த மருந்துகளில், ஆண்டிடிரஸன் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மருந்துகள் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களும் அடங்கும்.

இதற்கிடையில், மலேசிய குடிவரவு துணை இயக்குநர் ஜெனரல், டத்தோ லோக்மான் எஃபெண்டி ராம்லி கூறுகையில், பெரும்பாலான மருந்துகள் வங்கதேசத்திலிருந்து வந்த புலம்பெயர்ந்தோரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இத்தகைய கிளினிக்களில் பொதுமக்களுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படாத நிலையில், அனுமதி இல்லாத மருத்துவ நிபுணர்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பொதுமக்கள் மருத்துவ சேவைகள் தேவைப்படும் போதும், சட்டப்படி பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளையும் கிளினிக்கையும் மட்டும் அணுகுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset