நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விடுமுறை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கும் நெரிசல்

கோலாலம்பூர்: 

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில், விடுமுறை காலத்தைத் தொடங்கி இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசல்கள் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகரை நோக்கியும் வெளியேறும் திசையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன.

விடுமுறை, வார இறுதி காரணமாக மக்கள் பெருமளவில் பயணம் மேற்கொள்வதால் சில இடங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் பயண நேரம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

போக்குவரத்து அதிகாரிகள், சாலையின் நிலையை முன்கூட்டியே அறிந்து பயணத்தை திட்டமிடுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து அமைதியாக பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset