செய்திகள் மலேசியா
குடும்ப வன்முறை உச்சம்: ஏழு மாத கர்ப்பிணியை உலக்கையால் அடித்துக் கொலை செய்த கணவன்
கோத்தா திங்கி:
கம்போங் மாக்காம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், கணவர் உலக்கை (lesung batu) கொண்டு தாக்கியச் சம்பவத்தில் ஏழு மாத கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து காலை 7 மணியளவில் தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாகக் கோத்தா திங்கி மாவட்ட காவல் துறை தலைவர், யூசுப் உத்மான் தெரிவித்தார்.
"35 வயதுடைய சந்தேகநபர் காலை 7.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகே கைது செய்யப்பட்டார். ஆரம்பக்கட்ட விசாரணையில், இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்தது என தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 34 வயதுடைய அம் மாதுவும் அவரது கணவரும் ரோஹிங்க்யா இனத்தைச் சேர்ந்தவர்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும், இரண்டாம் மாடியில் உள்ள வாடகை வீட்டின் ஓர் அறையில் அந்தப் பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கல் உலக்கை போன்ற பொருளால் தாக்கப்பட்டதால், அவரது தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அப்பெண்னின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காகக் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
