நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எட்டாவது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் உயிரிழந்தான்

புத்ராஜெயா:

அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து 8 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தச் சம்பவம் நேற்று மாலை சைபர்ஜெயாவில் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 6.31 மணியளவில், ஒரு பெண்ணிடமிருந்து தகவல் கிடைத்ததாகச் செப்பாங் மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் நோர்ஹிசம் பஹாமன் உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் அந்தக் கட்டிடத்திலிருந்து விழுந்த நிலையில், உடனடியாகச் சைபர்ஜெயா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், அங்கு சிகிச்சை பெற்று வரும் போதே அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் காரணத்தைக் கண்டறிய, செப்பாங் மாவட்ட காவல் நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவு தற்போது மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

மதியம் 12 மணியளவில், சைபர்ஜெயா மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு, 2001ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM50,000 வரை அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், சம்பவம் குறித்த தகவல்கள் உள்ளவர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset