செய்திகள் மலேசியா
மடானி அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உரிய கவனம் செலுத்தும்:அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மடானி அரசு கிளந்தான் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும், மக்களின் நலனை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் உரிய கவனம் செலுத்துவதைத் தொடர்ந்து உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.
நேற்று, கிளந்தான் முதலமைச்சர் டத்தோ மொஹ்த் நசுருதீன் தாவுத் அவர்களின் மரியாதை நிமித்தமான சந்திப்பைத் தொடர்ந்து அவர் இதனை கூறினார்.
அந்தச் சந்திப்பில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, குறிப்பாக கிளந்தான் மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.
“வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகளின் விரிவு, நியாயமான, சமநிலையான வளர்ச்சியை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
“மடானி அரசு அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக கிளந்தானுக்கும் மக்களின் நலன், அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் உரிய கவனம் வழங்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
வேறொரு பதிவில், பிரதமர் பினாங்கு மாநில ஆளுநர் துன் ரம்லி ங்கா தாலிபுடன் அவரது மனைவி தோ புவான் ராஜா நூரா ஆஷிகின் ராஜா அப்துல்லாஹ் ஆகியோரின் மரியாதைச் சந்திப்பைப் பெற்றார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை ஸ்ரீ பெர்டானா இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தின்போது நடைபெற்றது.
நிதியமைச்சராகவும் உள்ள அன்வார் இந்தச் சந்திப்பு நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, பினாங்கின் வளர்ச்சி பாதை குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்கான தளமாகவும் அமைந்ததாக கூறினார்.
மேலும், மக்களின் நலன், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு இயக்கியாக அந்த மாநிலம் விளங்கும் திறன் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
