நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ ராதாரவிக்கு கலைச் செம்மல் விருது; திறமைக்கான அங்கீகாரம்: டத்தோஸ்ரீ சரவணன்

செலாயாங்:

டத்தோ ராதாரவிக்கு  வழங்கப்பட்ட கலைச் செம்மல் விருது அவரின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கலைமாமணி டத்தோ ராதாரவியின் கலைப்பயணப் பொன்விழா செலயாங் செங்கா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கண்ணதாசன் அறவாரியம், சுக்கிம் ஏற்பாட்டில் இவ்விழா நடைபெற்றது.

இம்மாபெரும் விழாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துவமிக்க நடிப்பால் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் கலைமாமணி டத்தோ ராதாரவிக்கு கலைச் செம்மல் விருது வழங்கி கெளரவித்ததில் மகிழ்ச்சி. 

ஒருவர் வாழும்போதே வாழ்த்த வேண்டும். அதுவே திறமைக்கு நாம் தரும் அங்கீகாரம். 

மலேசியாவில் நடைபெற்ற இந்த முத்தான நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றதில் மகிழ்ச்சி. 

எண்ணிலடங்கா விருதுகள் அவரது சாதனைகளின் பட்டயங்கள். மக்களின் பேரன்பு அவரது கலைக்கு வழங்கப்பட்ட உயரிய விருது. 

அத்தகைய மாபெரும் கலைஞரான கலைமாமணி டத்தோ ராதாரவி அவர்களுக்கு, உள்ளங்கனிந்த வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இதனிடையே மலேசிய கலைஞர்களுக்கும் இந்திய கலைத்துறைக்கு உறவுப் பாலமாக இருந்தவர் டத்தோ ராதாரவி.

நமது உள்ளூர் கலைஞர்களுக்கு பல உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் தான் அவருக்கான பொன்விழா மலேசியாவில் கொண்டாடப்பட்டது என்று சுக்கிம் தலைவர் டத்தோ டி. மோகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset