நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் ‘கேங் டாஉஸ் போத்தாக்’ கும்பலின் இருவர் போலீஸ் வலையில் சிக்கினர்

மலாக்கா: 

‘கேங் டாஉஸ் போத்தாக்’ எனப்படும் குற்றக் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், வீடுகளிலும் கடைகளிலும் கொள்ளையடித்ததாக சந்தேகத்தின் பேரில், மலாக்கா தெங்கா மாவட்டத்தில் போலீசாரால் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மாலை 5 மணியளவில், பொதுமக்களின் தகவலும் உளவுத் தரவுகளின் அடிப்படையில், மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைமையக குற்றப் புலனாய்வு பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. சந்தேகநபர்கள் 30 முதல் 40 வயதுக்கிடையில் உள்ளவர்கள் என்றும், இவர்களது கைது அந்த மாவட்டத்தில் பதிவான ஏழு வீட்டு உடைப்பு வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம், பல்வேறு உடைப்புக் கருவிகள், மேலும் கடிகாரங்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பியானோ, கைபேசிகள், கைப்பைகள் போன்ற திருட்டுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் பிரிவு 457, 379A(1) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதுடன், இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைக்காக இந்த வெள்ளிக்கிழமை வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset