நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்குடாயில் பயங்கர தீ விபத்து: இளைஞரும் இளம்பெண்ணும் உயிரிழந்தனர்

ஜொகூர் பாரு: 

ஸ்குடாய் பகுதியில் உள்ள தாமான் டமாய் ஜெயா குடியிருப்பு பகுதியில், இரண்டு மாடி கொண்ட ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் உயிரிழந்தனர்.

ஸ்குடாய் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் மூத்த உதவி கண்காணிப்பாளர் சைஃபுல்பஹ்ரி சஃபர் தெரிவித்ததாவது, காலை 5.28 மணிக்கு தகவல் கிடைத்ததும் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் 13 வீரர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். தீ, வீட்டின் தரைதள அறையில் பரவியிருந்ததாகவும், சுமார் 40 சதவீதம் சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

மீட்புப் பணியின் போது, 21, 22 வயதுடைய இரு நபர்களும் மேல்மாடியில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

போலீசார் கூறுகையில், உயிரிழந்த இருவரும் வேலை இடத்தில் அறிமுகமானவர்கள் என்றும், உயிரிழந்தவரின் கணவரிடம் வழக்கமான நடைமுறையின்படி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தீ விபத்தும், மரணத்துக்கான காரணங்களும் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset