நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுச் செயல்பாட்டு படையினரின் அதிரடி சோதனையில் மின்னணு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன

கோத்தா பாரு: 

கிழக்குக் கரையிலுள்ள மூன்று மாநிலங்களில் நடத்திய ‘ஒப் பெர்செபாடு இ-சிகரெட் மேகா’ என்ற சோதனை நடவடிக்கையில், பொதுச் செயல்பாட்டு படையின் தென்கிழக்கு பிரிவு, RM3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மின்னணு சிகரெட்டுகளையும் வேப் திரவங்களையும் பறிமுதல் செய்தது.

பொதுச் செயல்பாட்டு படையின் மூத்த உதவி ஆணையர் அஹ்மத் ரட்ஸி ஹுசைன் தெரிவித்ததாவது, குவாந்தானில் எட்டு, திரங்கானுவில் மூன்று, கிளாந்தானில் ஏழு என மொத்தம் 18 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நான்கு மணி நேரம் ஒரே நேரத்தில் இந்த நடவடிக்கை நடைபெற்றது.

இந்த நடவடிக்கையில் 157 பொதுச் செயல்பாட்டு படை வீரர்கள், சுகாதார அமைச்சின் 100 ஊழியர்கள், உள்ளாட்சி நிர்வாகத்தின் 59 அதிகாரிகள், உள்நாட்டு வரித்துறையின் 25 அதிகாரிகள் பங்கேற்றனர். சில வணிக வளாகங்கள், பொதுச் சுகாதாரத்திற்கான புகைப்பொருள் கட்டுப்பாட்டு சட்டம் 2024 (சட்டம் 852), பிற உரிமம் தொடர்பான விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டது.

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கை பேண பிற பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும், மின்னணு சிகரெட் விற்பனை தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிக்க பொதுமக்கள் தகவல் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset