செய்திகள் மலேசியா
திவேட் கல்வித் திட்டங்கள் குறித்து நேரடியாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
திவேட் கல்வித் திட்டங்கள் குறித்து நேரடியாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.
பண்டார் பாரு சுங்கைபூலோ இடைப் நிலைப்பள்ளியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
குறிப்பாக திவேட் புரட்சி பயணம் இந்த பள்ளியில் இருந்து தொடங்கியுள்ளது.
திவேட் கல்வி குறித்து நேரடியாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் அடிப்படையில் திவேட் புரட்சி பயணம் சுங்கைபூலோவில் தொடங்கி நாடு முழுவதும் தொடரும்.
திவேட் கல்வி திட்டம் என்றால் என்ன? இந்தத் துறையில் படித்து எவ்வாறு சாதிக்கலாம், திவேட் கல்வி என்பது சாதாரணமானது அல்ல உட்பட பல விழிப்புணர்வுகள் இந்த பயணத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இது ஒரு முக்கியமான விழிப்புணர்வு பிரச்சார பயணம் ஆகும்.
காரணம் இன்னமும் நாட்டில் மக்களிடையே டதிவேட் கல்வி திட்டம் குறித்து முழுமையான விழிப்புணர்வு இல்லை.
ஆக இந்த விழிப்புணர்வு பரவலாக இருக்க வேண்டுமென்றால் பள்ளியில் இருந்து தான் அதனை தொடர முடியும்.
இதன் அடிப்படையில் தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கண்டிப்பாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களை சந்தித்து இந்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
