நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன புத்தாண்டு, ரமலான் மாதத்தை முன்னிட்டு ஒரு மில்லியன் வாகனங்கள் கிளந்தானுக்குச் செல்லும் என  எதிர்பார்க்கப்படுகின்றது 

கோத்தா பாரு:

சீன புத்தாண்டு, ரமலான் மாத தொடக்கம் என தொடர்ந்து வரும் பெருநாட்களை முன்னிட்டு இந்த முறை கிளந்தானுக்குள் நுழையக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிகமான கிளந்தான் மக்கள் தங்களின் குடும்பத்தாருடன் முதல் நாள் நோன்பைக் கொண்டாட சொந்த ஊருக்குத் திரும்புவர் என கிளந்தான் மாநில காவல் துறை தலைவர், டத்தோக் மொஹ்த் யூசோப் மாமத் தெரிவித்துள்ளார்.

“சீன புத்தாண்டும் ரமலானின் ஆரம்பமும் ஒன்றாக வருவதால், கிளந்தானுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால், ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் ‘ஒப் செலாமட்’ நடவடிக்கையின் போது கிளந்தானின் முக்கியச் சாலைகளில் குறிப்பாகத் தற்போது சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் குவா முஸாங் பகுதியிலும் கவனம் செலுத்தப்படும்.

“மேலும், விபத்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அந்த இடங்களில் கூடுதல் போலீஸ் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் இன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சீன புத்தாண்டு காலத்தில் கிளந்தானில் நடைபெற்ற ‘ஒப் செலாமட்’ நடவடிக்கை சிறப்பான வெற்றியைப் பெற்றதாக அவர் கூறினார்.

“கடந்த ஆண்டு போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துகள் 252-இலிருந்து 228-ஆக குறைந்துள்ளன. இது 10 சதவீத குறைவாகும். மேலும், உயிரிழப்பு விபத்துகள் எட்டு சம்பவங்களிலிருந்து மூன்று சம்பவங்களாக குறைந்து, 63 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“அத்துடன், கடுமையான காயங்கள் ஏற்படும் விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை. இது எங்களின் திட்டமிடல், அர்ப்பணிப்பு  களப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் செயல்திறனை வெளிப்படுத்துகிறது,” என்றார் அவர்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset