செய்திகள் மலேசியா
மலேசியா, தாய்லாந்து எல்லையில் அரிசி கடத்தல் திட்டம் அம்பலமானது
புக்கிட் காயு ஹித்தாம்:
மலேசியா–தாய்லாந்து எல்லையில் உள்ள புக்கிட் காயு ஹித்தாம் ‘ICQS’ வளாகத்தில், சுமார் 100 டன் அரிசியை சட்டவிரோதமாக கடத்த முயன்ற முயற்சியை எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை தடுத்தது.
எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் மூத்த உதவி ஆணையர் முகமது நசாருதீன் எம் நசீர் கூறுகையில், தங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 4 மணியளவில் இரண்டு கொள்கலன் லாரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வில், எந்த அறிவிப்பும் இன்றி அண்டை நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிசி கண்டெய்னர்களின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு லாரியிலும் சுமார் 49,950 கிலோகிராம் அரிசி இருந்ததாகவும், மொத்தமாக கிட்டத்தட்ட 100 டன் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரண்டு கண்டெய்னர் லாரிகளும் அவற்றின் டிரெய்லர்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM1 மில்லியனைத் தாண்டும் என்றும், அதில் அரிசியின் மதிப்பு RM639,400 ஆகவும், வாகனங்களின் மதிப்பு RM420,000 ஆகவும் இருப்பதாக கூறப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
