நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வறட்சி அபாயம்: சிலாங்கூரில் காட்டுத் தீ எச்சரிக்கை

கோலாலம்பூர்:

மலேசிய வானிலைத் துறை கணிப்பின்படி, சிலாங்கூர் மாநிலத்தில் இந்த மாதம் முதல் ஜூலை வரை மழை அளவு 20 முதல் 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் நீண்ட காலம் வெப்பமும் உலர்ந்த வானிலையும் நிலவக்கூடும்.

வானிலைத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறுகையில், 2026 பிப்ரவரி முதல் ஜூலை வரை  நீண்டகால வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் மழை மிகக் குறைவாகப் பதிவாகலாம் என்றும், அது 90 முதல் 110 மில்லிமீட்டர் வரை இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய வெப்பம், வறட்சி நிலைக்கு எல் நினோ காரணமல்ல என்றும், கடந்த நவம்பர் முதல் உலகளவில் குறைந்த லா நினா காரணமாகவே மலேசியாவில் மழை முன்கூட்டியே குறைந்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.

இந்த லா நினா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்தினாலும், மலேசியாவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரணமாக ஜனவரி முதல் மார்ச் காலப்பகுதியில் மட்டுமே தொடங்கும் உலர் காலநிலை, இந்த ஆண்டு டிசம்பர் இறுதியிலேயே ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, சிலாங்கூரில் சில பகுதிகள் காட்டுத் தீ அபாயம் அதிகம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக ராஜா மூசா வனக்காப்பகம், கோலா லங்காட் தெற்கு, வடக்கு வனக்காப்பகங்கள், ஜோஹன் செத்தியா பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset