செய்திகள் மலேசியா
ஆலயங்களின் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் மஇகாவும், மலேசிய இந்து சங்கமும் இணைந்து செயல்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
ஆலயங்களின் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் மஇகாவும், மலேசிய இந்து சங்கமும் இணைந்து செயல்படும்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
ஆலயங்கள் மீதான ஒரு சில அண்மைய அறிவிப்புகள், ஜம்ரி வினோத் போன்ற பொறுப்பற்றவர்களின் குறைகூறல்கள் அனைத்தும் மலேசிய இந்துக்களுக்கு அச்சுறுத்தலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு, மஇகாவும் மலேசிய இந்து சங்கமும் இணைந்து நாடு தளுவிய அளவில் ஆலயங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைக் களைவதற்கும், அவர்களுக்குத் துணை செய்வதற்கும் ஒருங்கிணைந்து செயல்படவிருக்கின்றன.
ஒவ்வொரு மாநில மஇகா அலுவலகமும் இதற்கான செயலகமாக செயல்படும்.
இந்து சங்கத்தோடு இணைந்து அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டிருக்கின்ற ஆலயப் பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகள்; அதற்கு என்ன மாதிரியான தீர்மானங்களையும், ஆலோசனைகளையும் வழங்க முடியும் என்பதனை ஆலோசிக்கும். அதே நேரத்தில் அந்தந்த மாநில அரசிற்கு என்ன மாதிரியான வேண்டுகோளையும், தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என்று ஆராய்வதற்கும் அந்தந்த மாநிலங்களில் இணைந்து செயல்பட வேண்டும்.
இதற்கு மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசனும் ஒருமித்த கருத்தோடு இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு தந்துள்ளார்கள்.
மலேசிய இந்துக்கள் அனைவரும் இந்த சூழலை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவோம்.
மாநில மஇகா பொறுப்பாளர்களும், இந்து சங்கப் பொறுப்பாளர்களும் உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
