நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க டாலர் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து, மலேசியா ரிங்கிட் மேலும் வலுவடைந்துள்ளது

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலர் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை ரிங்கிட் டாலருக்கு எதிராக வலுவாகத் தொடங்கியது.

காலை 8 மணிக்கு, ரிங்கிட் 3.9250/9340 என்ற அளவுக்கு உயர்ந்தது; திங்களன்று அது 3.9325/9375 என்ற நிலையில் முடிந்திருந்தது.

மலேசியாவின் முமாலத் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறுகையில், சீனா தனது நிதி நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசுத் திறைச்சேர்ப்பு பத்திரங்களில் முதலீட்டைக் குறைக்க அறிவுறுத்தியதாக வந்த தகவல்களால் டாலர் பலவீனமடைந்ததாகத் தெரிவித்தார். இதனால் அமெரிக்க டாலர் குறியீடு 0.79 சதவீதம் சரிந்தது.

நவம்பர் 2025 நிலவரப்படி, சீனாவின் அமெரிக்க பத்திர முதலீடு 682.6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாகவும், இது 2011-இல் இருந்த உச்சமான 1.3 டிரில்லியன் டாலரைவிடக் குறைவானது என்றும் அவர் கூறினார். டாலர் பலவீனமாகத் தொடர்ந்தால், ரிங்கிட் RM3.92 முதல் RM3.94 வரை நிலைத்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மலேசியா ரிங்கிட் பிரிட்டிஷ் பவுண்டு, யூரோ, ஜப்பானிய யென் ஆகியவற்றுக்கு எதிராக சற்று சரிந்தது. ஆனால் சிங்கப்பூர் டாலரைத் தவிர, மற்ற ஆசியான் நாணயங்களுக்கு எதிராக பெரும்பாலும் உயர்வு கண்டது.

இந்திய ரூபாய்க்கு எதிராகவும் மலேசியா ரிங்கிட் தொடருந்து வலுவடைந்து காணப்படுகிறது. ஒரு மலேசிய ரிங்கிட் 23.11 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset