நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோழிகளை விழுங்கிய 70 கிலோ மலைப்பாம்பு: பாதுகாப்பு படையினரால் பிடிப்பட்டது

பன்டார் பாரு:

கம்போங் பத்து 22, ஜாலான் செலாமா பகுதியில் உள்ள கோழிக்கூண்டில் எழுந்த சத்தம், குடியிருப்பு அருகே ஒரு பெரிய மலைப்பாம்பு இருப்பதை வெளிப்படுத்தியது. அந்த பாம்பு பல கோழிகளை விழுங்கியதாக நம்பப்படுகிறது.

56 வயதுடைய பெண் ஒருவர் இதைக் கவனித்து, மலேசிய சிவில் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தார். நள்ளிரவு 12.54 மணிக்கு வந்த அழைப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு குழு விரைந்து வந்து, மூன்று மீட்டருக்கு மேல் நீளமும் 70 கிலோ எடையும் கொண்ட அந்த பாம்பை பிடித்தது.

பிடிக்கப்பட்டப் பாம்பு தற்காலிகமாக மலேசிய சிவில் பாதுகாப்பு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதிக வெப்பம் காரணமாக பாம்புகள் தங்களது இயற்கை வாழ்விடத்தை விட்டு வெளியே வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset