நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்தில் ஆறு வயது சிறுமி உயிரிழப்பு: இரண்டு வீடுகள் சாம்பலாகின

தம்புனன்:

கம்பூங் படாவ் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு வீடுகள் முழுமையாக எரிந்து நாசமாயின. இதில் ஆறு வயது சிறுமி உயிரிழந்தார்.

அதிகாலை 4 மணியளவில் நடந்த சம்பவத்தில், ஒரு அறைக்குள் சிறுமியின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காலை 4.08 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு, மீட்புத் துறையினர் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் இரண்டு வீடுகள், மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. மற்றொரு நபர் தப்பிக்க முயன்றபோது காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset