நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பஹாங் ஆற்றில் மூழ்கி காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் உயிரிழந்திருக்கலாம்: சூப்பிரிண்டெண்ட் முஹம்மது சைதி மாட் ஸின்

குவந்தான்:

19 வயதுடைய ஒரு இளைஞர், பெக்கான் மாவட்டத்தின் பாலோ ஹினாய், கம்போங் தெபாட் மீன் கூண்டு அருகே உள்ள பஹாங் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட முகமது யூசுப் அப்துல்லா தொடர்பான தகவல் நேற்று மதியம் 1.15 மணியளவில் பாலோ ஹினாய் காவல் நிலையத்திற்கு கிடைத்ததாகப் பெக்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சூப்பிரிண்டெண்ட் முஹம்மது சைதி மாட் ஸின் தெரிவித்தார்.

அருகில் வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், அந்த இளைஞர் ஆற்றில் தவறி விழுந்ததைப் பார்த்ததாகத் தகவல் கூறியுள்ளார்.

“ஆற்றின் வேகமான நீரோட்டம் காரணமாக உதவி வழங்கப்படும் முன்பே அவர் மூழ்கி பார்வையிலிருந்து மறைந்ததாக நம்பப்படுகிறது.

“இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு கம்பங் தெபாட் பாம் பாசிர் பகுதியில் சம்பவக் கட்டுப்பாட்டு மையம் (PKTK) செயல்படுத்தப்பட்டு, தேடுதல் பணிகள் செயல்படுத்தப்பட்டன.

“மலேசிய காவல் படை (PDRM), தீயணைப்பு, மீட்பு துறை (JBPM),  குடிமைத் தற்காப்புப் படை (APM) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இரண்டு படகுகள், தேவையான உபகரணங்களுடன் 20 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

“நேற்று மாலை 6 மணி வரை, அவர் விழுந்த இடம், ஆற்றங்கரை, மீன் கூண்டு பகுதிகளில் ஆரம்பகட்ட தேடுதல் மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை மீண்டும் பணிகள் தொடரப்பட்டன,” என அவர் தெரிவித்தார்.

இன்றைய தேடுதல் நடவடிக்கை சம்பவ இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவல் இருந்தாலும் அருகிலுள்ள காவல் நிலையத்தைத்த தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset