நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து காஜாவில் கோர விபத்து: 3 வயது சிறுமி உட்பட மூவர் பலி

பத்து காஜா:

தஞ்சோங் துவாலாங் சாலையில் நேற்று இரவு நடந்த விபத்தில், மூன்று வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர். நான்கு சக்கர வாகனமும் ஒரு காரும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

பெரோடுவா மைவி காரை ஓட்டிச் சென்ற 34 வயதான எஸ்.ஆர். சரளா தேவி , முன் இருக்கை பயணியான ஜி. சரஸ்பதி கோபால் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரவு 9.45 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற வீரர்கள் ஹைட்ராலிக் கருவிகளைப் பயன்படுத்தி சிக்கியிருந்த இருவரின் உடல்களை மீட்டனர்.

மூன்று வயது சிறுமி எஸ். சாஸ்திக்கா, பொதுமக்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீட்புப் பணிகள் இரவு 11.30 மணிக்கு முடிவடைந்தன.

இதற்கிடையில், நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிய 27 வயது இளைஞருக்கு கை, கால், முழங்கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset