செய்திகள் மலேசியா
போலி கார் பதிவு எண்ணை பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்த மியான்மர் நாட்டவர்கள் கைதாகினர்
தும்பாட்:
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேரைப் போலீஸார் இன்று கைது செய்தனர். ஐந்து பெண்கள், நான்கு ஆண்கள் அடங்கிய இவர்கள், அதிகாலை 4.30 மணியளவில் பாசிர் பெக்கான், வகாப் பாருவில் உள்ள சுல்தான் யாஹ்யா பெட்ரா பாலத்தின் சுரங்கப்பாதையில் பிடிபட்டனர்.
ரகசியமான முறையில் சென்ற புரோட்டான் ப்ரீவ் காரைத் தடுக்க முயன்றபோது, அது நிற்காமல் வேகமாகச் சென்று தடுப்புச்சுவரில் மோதியது.
பின்னர் ஓட்டுநர் தப்பியோடியதாக போலீஸ் தெரிவித்தது. வாகனத்தில் போலி பதிவு எண் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், சேசிஸ் எண்ணுக்கும் பதிவுகள் இல்லை.
பயணிகளிடம் எந்தச் செல்லுபடியாகும் பயண ஆவணங்களும் இல்லை என்றும், சட்டவிரோதமான மறைமுகப் பாதைகள் வழியாகவே அவர்கள் மலேசியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே பிடிப்பட்டவர்களிடமிருந்து 10 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு குடியேற்றச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது; அனைவரும் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
