செய்திகள் மலேசியா
வளர்ப்பு தாயின் கொடுமைக்கு உள்ளான 11 வயது சிறுமி: JKM-ஆல் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
கூச்சிங்:
சரத்தோக் பகுதியில் வளர்ப்பு தாயின் கொடுமைக்கு உள்ளானதாகச் சந்தேகிக்கப்படும் 11 வயது சிறுமியின் வழக்கைக் கையாள பெண்கள், குடும்பம், சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் பாதுகாப்பு அதிகாரிகளையும் ஆலோசகர்களையும் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தற்போது போலீஸ் விசாரணையில் இருப்பதால், மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்ட சிறுமியைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காகச் சரத்தோக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், கணித துணைப்பாட வகுப்பிற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் குறித்து கேட்டபோது சிறுமி தன் வளர்ப்பு தாயால் குழாயால் அடிக்கப்பட்டு முகம், முதுகுப்பகுதிகளில் காயம் அடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அழுதபடி அடிபடும் சத்தம் கேட்கும் வீடியோ பதிவு ஒன்று அச்சிறுமியின் அண்டை வீட்டாரான ஆசிரியர் ஒருவருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்று சரத்தோக் மாவட்ட காவல் துறை தலைவர் துணை சூப்பிரண்டெண்ட் மேத்யூ மாங்கி கூறியுள்ளார்.
அந்த ஆசிரியர் அடுத்த நாள் சிறுமியைப் பள்ளி அலுவலகத்திற்கு அழைத்து பரிசோதித்தபோது, அவளது கன்னம், முதுகில் காயங்கள் இருந்ததைக் கண்டறிந்தார்.
அச்சிறுமி, 47 வயதுடைய தனது வளர்ப்பு தாய் தன்னை இரு கன்னங்களிலும் அறைந்ததாகவும், மஞ்சள் நிற குழாயால் அடித்ததாகவும் தெரிவித்தார்.
சிறுமியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் பிப்ரவரி 7ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் சந்தேக நபரை சரத்தோக் புங்கா ராயா சாலையில் கைது செய்து, மஞ்சள் நிற குழாயை ஆதாரமாக பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு, 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)(a)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சந்தேக நபரை தடுப்புக்கு காவலில் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்ததும் வழக்கு ஆவணங்கள் வழக்கறிஞர் தரப்புக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
