செய்திகள் மலேசியா
அபாயகரமாக மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்திய இளைஞர்கள் கைது
கோலாலம்பூர்:
சமூக ஊடகங்களில் பரவிய அபாயகரமான மோட்டார் சைக்கிள் சாகசம் காரணமாக, 15, 18 வயதுடைய இரு இளைஞர்கள் இன்று அதிகாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கப் பிரிவு (JSPT) தலைவர் உதவி ஆணையர் முஹம்மது ஜம்ஸுரி முஹம்மது இசா கூறுகையில், 14 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவியதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
அந்த வீடியோவில் கருப்பு நிற யமஹா 135LC Fi மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர் முன்சக்கரத்தை தூக்கிச் சாகசம் செய்ததுடன், பின்னால் அமர்ந்திருந்தவர் சாலையில் தலையை இழுத்துச் செல்லும் ஆபத்தான செயலில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது.
புலனாய்வு நடவடிக்கைகளின் பின், சுங்கை பூலோ, சிலாங்கூரில் உள்ள இரு வேறு வீடுகளில் இன்று அதிகாலை 2 மணி முதல் 2.30 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, அதிகாலை 3.30 முதல் 4 மணி வரை ஜாலான் துன் ரசாக் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. அந்த வீடியோ முகநூலில் 1,500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பல கருத்துகளையும் பெற்றுள்ளது.
இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 42(1)இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தை பார்த்தவர்கள் போலீஸாருக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
