நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹீலியம் சிலிண்டரில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் : 4 பேர் கைது

கோலாலம்பூர்:

ஜாலான் துன் ரசாக் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட இரண்டு சிறப்பு நடவடிக்கைகளில், ஹீலியம் வாயு சிலிண்டர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு போதைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்ததுடன், மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறுகையில், மாலை 5.30 மணியளவில் முதல் சோதனை நடத்தப்பட்டதில், சீனா குடியுரிமை கொண்ட இரு ஆண்களும் ஒரு பெண்ணும் (26–36 வயது) கைது செய்யப்பட்டனர்.

சோதனையில் ‘ஹீலியம்’ எனக் குறிக்கப்பட்ட ஐந்து சிலிண்டர்கள், மெத்திலீன் டையாக்ஸிமெத்தாம்பேட்டமைன் (MDMA) போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூன்று பொட்டலங்கள், மெத்தாபெட்டமைன் வகை போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன. மூவரின் சிறுநீர் பரிசோதனையில் ஆம்பெடமைன், மெத்தாபெட்டமைன், கேட்டமின் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த கும்பல் கடந்த மூன்று மாதங்களாக, பலூன்களுடன் இணைத்து கிளப் பகுதிகளில் மெத்திலீன் டையாக்ஸிமெத்தாம்பேட்டமைன் வழங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அதே இடத்தில் 39 வயதான உள்ளூர் ஆணும் கைது செய்யப்பட்டார். மேலும், 58.24 கிலோ எடையுள்ள 14 பெட்டிகளில் மெத்திலீன் டையாக்ஸிமெத்தாம்பேட்டமைன் வாயு சிலிண்டர்களும், ஏழு மூட்டைகள் பலூன்களும் ஒரு பெரோடுவா கார் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தமாக RM69,491 மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகநபர்கள் அனைவரும் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset