செய்திகள் மலேசியா
சீன புத்தாண்டை முன்னிட்டு 'BB Charity' மூலம் 1,000க்கும் மேற்பட்டோர் உதவி பெற்றனர்
ஷா ஆலம்:
சீன புத்தாண்டை முன்னிட்டு வருடாந்திர 'Karnival BB Charity' முயற்சியின் மூலம் ஐந்து பராமரிப்பு இல்லங்களில் உள்ள 1,000க்கும் மேற்பட்டோர் உதவி பெற்றுள்ளனர்.
KK Mart Retail Group, BB Charity Society, Malaysia Chinese Assembly Hall (MCAH) இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முதியவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் அல்லது தந்தைமார்கள், பெற்றோர் இல்லா குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் (OKU), பொருளாதார ரீதியாகச் சிரமப்படுபவர்கள் இந்த உதவியைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது என்று KK Mart Retail Group நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குனர், MCAH தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் கூறினார்.
20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உணவு, பொருட்கள், ஆதரவு வழங்கி இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்துள்ளனர்.
“இந்த கூட்டு முயற்சி தேவையானவர்களுக்கு உதவி சரியான முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.
இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சமூகத்தினருக்கும் இந்த உதவியானது நன்முறையில் சென்று சேர வேண்டும் என்பதையே இந்நிகழ்ச்சி முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
BB Charity என்பது உதவி வழங்கும் நிகழ்ச்சி மட்டுமல்லாது மனித உறவுகளை வலுப்படுத்தும் தளமாகும்” என்று அவர் தெரிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
