நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2018 முதல் உரிமம் இல்லாத பென்ட்லி கார் பறிமுதல்: பெண் தொழிலதிபர் கைது

கோலாலம்பூர்:

2018 முதல் வாகன உரிமமும் காப்பீட்டையும் புதுப்பிக்கப்படாமல் இருந்ததாகக் கூறி, ஒரு பெண் தொழிலதிபர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து துறை (JPJ) இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்ததாவது, ஜாலான் துன் ரசாக் பகுதியில் நடத்தப்பட்ட ‘Ops Khas Luxury’ நடவடிக்கையின் போது, பென்ட்லி காரை ஓட்டி வந்த அந்தப் பெண் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சோதனையில், அந்த வாகனம் அவருடையதே என்றும், வாகன உரிமம் காலாவதி, காப்பீடு இல்லாமை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (CDL) இல்லாமை போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டதாக கூறினார்.

மேலும், அந்த ஆடம்பர வாகனத்தின் உரிமமும் காப்பீடும் 2018 முதல் புதுப்பிக்கப்படவில்லை என்றும், இதற்கு முன்பு குடும்பத்தினர் இவற்றை கவனித்துவந்ததால் தான் கவனிக்க தவறியதாக அவர் விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த வாகனம் 1987 சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹமிடி கூறினார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset