நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா உதவித் தொகை பொருட்களில் உறைந்த உணவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது: பிரதமர்

புத்ராஜெயா:

அடிப்படை ரஹ்மா உதவித் தொகை பொருட்களின் வகையை உறைந்த உணவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை  கூறினார்.

சாராவை செயல்படுத்துவதில் சிறிய சில்லறை விற்பனைக் கடைகளின் ஈடுபாடும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10,000 ஆக அதிகரிக்கப்படும்.

இன்று பிப்ரவரி 9 முதல் டிசம்பர் 31 வரை, 18 வயதும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியன் மலேசியர்கள் அனைவரும் மைகாட் வழியாக 100 ரிங்கிட்டை பெறுவார்கள்.

இருப்பினும், பலர் ஆயத்த பொருட்களின் வகையை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை எழுப்பியுள்ளனர்.

சாரா பொருட்களின் வகையை உறைந்த உணவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset