நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹம்சா இன்னும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை: அஷ்ராப்

கோலாலம்பூர்:

பெர்சத்து துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் இன்னும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

கோத்தா செபூத்தே சட்டமன்ற உறுப்பினர் அஷ்ராப் முஸ்தகிம் பத்ருல் முனிர் இதனை கூறினார்.

நேற்றிரவு பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுடன் ஒரு நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கலந்து கொண்டனர்.

இதில் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் கலந்துக் கொண்டார்.

இதன் அடிப்படையில்  அவர் இன்னமும்  பெர்சத்து கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.

ஹம்சா இன்னும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று புக்கிட் டாமன்சாராவில் உள்ள முன்னாள் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே சந்தித்தபோது அவர் செய்தியாளறர்களிடம் இவ்வாறு கூறினார்.

30க்கும் மேற்பட்ட பெர்சத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்,  மூத்த கட்சித் தலைவர்கள் முஹைதினின் வீட்டில் கூடிவந்தனர்.

பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி மற்றும் துணைத் தலைவர்கள் டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு மற்றும் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset