நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாத வழிபாட்டுத் தலங்களை இடிப்பதற்கு உள்ளூர் ஊராட்சித் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது: பிரதமர்

புத்ராஜெயா:

சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேண்டுமென்றே கட்டப்பட்ட ஆலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களை இடிக்க உள்ளூர் ஊராட்சித் துறையினருக்கு அரசாங்கம் அதிகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

சட்ட விதிமுறைகள், நடைமுறைகளைப் பின்பற்றாதவை உட்பட எந்த வழிபாட்டுத் தலங்களையும் கட்ட அரசாங்கம் அனுமதிக்காது.

விதிமுறைகளைப் பின்பற்றாத வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானம் இனி அனுமதிக்க மாட்டோம் என்ற எங்கள் முடிவை இதன் மூலம் அறிவிக்க விரும்புகிறேன்.

மேலும் இந்தப் பிரச்சினையை முறையாகத் தீர்க்கும் வகையில் கோயில்களுக்குச் சொந்தமில்லாத பகுதிகளை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளூர் ஊராட்சித் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் ஆலயங்களை இடிக்க ஒரு பிரச்சாரம் நடக்கும் அளவுக்கு அது தீவிரமடைந்தால், அதுவும் தவறு என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் இன்று தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் மாதாந்திர மாநாட்டில் தனது செய்தியை ஆற்றும்போது அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset